Bharatiya janata party welfare schemes

தேசிய கல்விக்கொள்கை 2019

NEP 2020 TAMIL

பற்றி நமது பிரதமர் மோடி ஜி அவர்களின் உறை


  • மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் பல்கலைக்கழக மானிய குழுவின் சார்பில் புதிய கல்வி கொள்கை பற்றிய மாநாடு நேற்று டெல்லியில் நடைபெற்றது. ‘தேசிய கல்வி கொள்கையின் கீழ் உயர்கல்வியில் சீர்திருத்தங்கள்’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பேசினார்.
  • அப்போது அவர் கூறியதாவது:-
  • புதிய தேசிய கல்வி கொள்கை தொடர்பாக கடந்த 4 ஆண்டுகளாக பலமுறை விரிவாக ஆலோசனைகள் நடத்தப்பட்டு, லட்சக்கணக்கானவர்களிடம் இருந்து யோசனைகள் பெறப்பட்டன. அதன்பிறகே புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்த புதிய கல்வி கொள்கை யாருக்கும் சாதகமானதாகவோ அல்லது பாதகமானதாகவோ இல்லை. இதில் பல்வேறு சீர்திருத்தங்கள் உள்ளன. முன்னேறிச் செல்வதற்கு சீர்திருத்தம் ஒன்றே வழி.
  • திறனை மேம்படுத்தும்
  • இந்த கல்வி கொள்கை 21-ம் நூற்றாண்டில் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான அடித்தளமாக அமையும். இதுவரை இருந்த நமது கல்வி முறை எதைப்பற்றி சிந்திக்க வேண்டும் என்பது பற்றி முக்கியத்துவம் அளித்தது. புதிய கல்வி கொள்கை எப்படி சிந்திக்க வேண்டும் என்பதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அமைந்து இருக்கிறது.
  • 21-ம் நூற்றாண்டுக்கு மாணவர்களை தயார்படுத்துவதற்கு தேவையான அறிவையும், திறமைகளையும் புதிய கல்வி கொள்கை அவர்களுக்கு வழங்கும். அவர்களுடைய கற்பனை திறனை மேம்படுத்தும். பாடங்களை புரிந்து படிப்பது, படிப்பதை நடைமுறைப்படுத்துவது, புதுமையாக சிந்தித்தல் ஆகிவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்திய மாணவர்களின் திறனை உலகத்தரத்துக்கு மேம்படுத்தும் வகையில் புதிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது.
  • மேலும் இது தாய் மொழி கல்வியை ஊக்குவிக்கும். தாய் மொழியில் படிப்பதன் மூலம் மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதனால்தான் 5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கற்க புதிய கல்விக் கொள்கையில் வகை செய்யப்பட்டு உள்ளது.
  • தரமான கல்வியை வழங்குவதற்காக கல்வி நிறுவனங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படும். வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னணி கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள், வளாகங்களை இந்தியாவில் அமைக்க புதிய கல்வி கொள்கை வகை செய்கிறது.
  • இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
  • மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால், அந்த துறையின் ராஜாங்க மந்திரி சஞ்சய் தோத்ரே மற்றும் புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு குழுவின் தலைவர், உறுப்பினர்கள், கல்வியாளர்கள் மாநாட்டில் பங்ககேற்றனர்.

#COVID-19

மத்திய அரசின் நிதி உதவி கொரோனா வைரஸ் பாதிப்புக்காக


  • ஒவ்வொரு ஜன் தன் ஜோஜன வங்கி அக்கௌன்ட் பெண்களுக்கு மாதம் INR 500.00
  • மூத்த குடி மக்களுக்கு மாதம் INR 1000.00
  • வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு இலவச காஸ் சிலிண்டர்.
  • குடும்ப அட்டைதாரர்களுக்கு 5kgs அரிசி மற்றும் 1kgs பருப்பு மாதாமாதம் கூடுதலாக வழங்கப்படும்.
  • இவ்வாறு 3மாதங்களுக்கு மார்ச் முதல் மே மாதம் வரை. வழங்கப்படும்.
  • மேலும் சிறு மற்றும் குரு விவசாயிகளுக்கு Rs 2000.00
  • ஊரக வேலை வாய்ப்பு பயனாளிககுக்கு Rs 2000.00 மற்றும் தினசரி ஊதியம் rs 200 ஆக உயர்த்தி உள்ளளது.
  • மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு Rs 20லட்சம் வரை பிநயம் இல்லா கடன் வசதி.
  • கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு Rs 50லட்சத்திற்க்கான இலவச காப்பீடு.
  • 100தொழிலார்களுக்கு குறைவாக உள்ள நிறுவனங்களில், வைப்பு நிதியை அரசே செலுத்தும் 90% அதிகமாகவர்கள் Rs 15000க்கு குறைவாக சம்பளம் இருந்தால்.

நிகழ்வுகள்

மத்தியில் ஆளும் பாஜக அரசால் இன்று தாக்கல் செய்யப்படுகிறது இடைக்கால பட்ஜெட். இந்த பட்ஜெட்டினை இடைக்கால நிதி அமைச்சராக இருக்கும் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார் பியூஷ் கோயல். அந்த பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்.

  • விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம்
    ரூபாய் 75 ஆயிரம் கோடி செலவில் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். இதன் மூலம் 12 கோடி விவசாயக் குடும்பங்கள் பயன் அடைவார்கள். மூன்று தவனைகளாக, 2 ஏக்கர் அளாவு வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இந்த தொகை வழங்கப்படும்.
  • மீன்வளத்துறை

Budget 2019 Highlights

மத்தியில் ஆளும் பாஜக அரசால் இன்று தாக்கல் செய்யப்படுகிறது இடைக்கால பட்ஜெட். இந்த பட்ஜெட்டினை இடைக்கால நிதி அமைச்சராக இருக்கும் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார் பியூஷ் கோயல். அந்த பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்.

  • விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம்
    ரூபாய் 75 ஆயிரம் கோடி செலவில் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். இதன் மூலம் 12 கோடி விவசாயக் குடும்பங்கள் பயன் அடைவார்கள். மூன்று தவனைகளாக, 2 ஏக்கர் அளாவு வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இந்த தொகை வழங்கப்படும்.
  • மீன்வளத்துறை
    மீனவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு மீன்வளத்துறை அமைக்கப்படும்.
  • ஓய்வூதியத் திட்டம்
    தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மத்தீய அரசின் பங்களிப்பை 10% இருந்து 14% மாக உயர்த்தப்படும். பி.எஃப். சந்தாதாரார்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி 6 லட்சம் வழங்கப்படும்.
  • அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்
    மாதம் 15 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக வருமானம் பெறும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் ஓய்வூதிய திட்டம் அறிமுகம். இந்த திட்டங்கள் மூலமாக 10 கோடி பேர் பயனடைவார்கள். 60 வயதிற்கு பின்பு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாத ஓய்வு ஊதியமாக ரூ.3000 வழங்கப்படும். இதற்காக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • காமதேனு திட்டம்
    பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் காமதேனு என்ற சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பாதுகாப்புத்துறை
    பாதுகாப்புத் துறைக்கு அதிக அளவு பட்ஜெட் ஒதுக்கப்பட்டு அறிவிப்பு. ராணுவத்திற்கு கூடுதல் பட்ஜெட் ஒதுக்கி அறிவித்துள்ளது மத்திய அரசு. 3 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கம்.
  • பெண்கள் மேம்பாடு
    கூடுதலாக 8 கோடி இலவச கேஸ் இணைப்புகள் தரப்படும். முத்ரா திட்டத்தின் கீழ் 70% பெணகள் பயனடைந்துள்ளனர். 7.23 லட்சம் கோடி கடன் முத்ரா திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. பணிபுரியும் பெண்களுக்கு 26 வாரம் பேறுகால விடுப்பு அளிக்கப்படுள்ளது.
  • போக்குவரத்து
    நெடுஞ்சாலைகளை உருவாக்குவதில் இந்தியா மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாள் ஒன்றிற்கு 27 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.
  • மொபைல் டேட்டா & மேக் இன் இந்தியா
    செல்போன் டேட்டா பயன்பாடு கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. 15%க்கும் மேல் அதிகமடைந்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவிலேயே செல்போன்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் உருவாக்கத்தின் மூலம் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. 268 உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • ரயில்வே துறை
    ரயில்வே துறைக்கு 64,587 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அறிவிப்பு. தேசம் முழுவதும் ஆளில்லா ரயில்வே கிராசிங் குறைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஏற்படும் விபத்துகளும் குறைந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ரயில்வே சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • வருமான வரி
    நடுத்தர மக்களின் வரிச்சுமையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. வரி வருவாய் 6,38,000 கோடியில் இருந்து 12 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு. வீட்டுக்கடனுக்கான வட்டிச் சலுகை 2 வீடுகளுக்கு அளிக்கப்படும். வீட்டு வாடகைக்கான வரி விலக்கு வரம்பு ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்தில் இருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • பணமதிப்பு நீக்க நடவடிக்கை
    பணமதிப்பு நீக்க நடவடிக்கைகள் மூலமாக 1.03 லட்சம் கோடி கருப்புப் பணம் வெளி வந்துள்து.

70 வது குடியரசு தினவிழா

70 வது குடியரசு தினவிழா அன்று பாலாஜி கார்டன் பகுதியில் மத்திய அரசின் நலத்திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது
- பி.ஜே.பி கரட்டுமேடு