இளைஞர்களை ஆற்றலதிகாரம் பெறச்செய்தல்:
35 வயதுக்குட்பட்டவர்கள் 60 சதவிகிதத்திற்கு மேலேயுள்ள உலகிலேயே மிகவும் இளமையான நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
இந்தியாவிலுள்ள இளைஞர்கள் நம் மக்கள்தொகையின் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் துடிப்பான பிரிவைச் சார்ந்தவர்களாவார்கள். பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் வயதான தொழிலாளர்களை எதிர்கொள்ளும் நிலையில்இந்தியாவின் திறமைசாலிகள் கொண்ட தொகுப்பு வளர்ச்சிக்கு ஒரு பெரும் வாய்ப்பை கொடுக்கும்.
சுய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் திறன்கள் மூலம் அதிகாரம் பெறச்செய்தல் ஆகியவை திறமை வாய்ந்த இளைஞர்களுக்கு தொழில்முனைவு தளத்தையும் திறமை வாய்ந்த புத்தாக்க நடவடிக்கைகளை உருவாக்குவதற்குரிய ஒரு தளத்தையும் இயல்விக்கச் செய்கிறது. ஒரு நாட்டின் வெற்றி எப்போதும் அதன் இளைஞர்களின் வெற்றியையே சார்ந்திருக்கிறது.
சுதந்திரம் பெற்றதிலிருந்து முதல்முறையாகää இளைஞர்களிடம் உள்ள மேற்கண்ட பண்புகளை வெளிக்கொணர்ந்து அதிகாரம் பெறச்செய்வதற்காகநம் மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் இளைஞர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியிருக்கிறார்.