“2020-க்குள் வளர்ந்த இந்தியா” என்பது மக்கள் தலைவர் டாக்டர். யுPது அப்துல் கலாம் அவர்களது கனவாகும். ஒரு தேசம் வளர அதற்கு திறன்கள் மட்டுமின்றி ரத்தத்தில் தேசப்பற்றும் மற்றும் மனதில் தேச மேம்பாடும் கொண்ட தலைமையும் தேவை.
ஏழைகளுக்கு திறனும் அதிகாரமும் அளிக்கப்பட்டால் ஒரு தேசமே திறன்பெற்றதாக மாறும்.
நமது மாண்புமிகு பாரதப்பிரதமர் மோடி அவர்கள் நமது பெருமை மிக்க தேசத்தினை “வளர்ச்சி” பாதையில் கொண்டு செல்லும் வகையில் “2020-க்குள் வளர்ந்த இந்தியா” என்னும் இலக்கினை எட்டும் நோக்கில் நமது தேசத்தின் பயணத்திற்கு திறனளிக்கும் வகையில் பல்வேறு நல்வாழ்வு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார்.
அத்தகைய மேம்பாட்டினை கூர்நோக்கமாகக் கொண்ட முன்முயற்சிகளை புரிந்துகொள்ள வேண்டியதும் மற்றும் தேச மேம்பாட்டிற்கான பங்களிப்பினை வழங்க வேண்டியதும் ஒவ்வொரு குடிமகனின் கடமை மற்றும் பொறுப்பாகத் திகழ்கிறது.