குடிமக்களின் மிக முக்கிய தேவைகளில் ஒன்று அனைவருக்கும் கட்டுப்படியாகும் ஆரோக்கியப்பராமரிப்பு கிடைக்கப்பெற வேண்டும் என்பதே ஆகும். பெரும்பாலான மக்களுக்கு குறிப்பாக கிராமப்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை ஆரோக்கியப்பராமரிப்பு அமைப்புகளுக்கான அணுகுவசதி என்பது இன்னமும் எட்டாக்கனியாகவே உள்ளது. பல மக்கள் குறிப்பான ஏழைகள் மற்றும் பெண்கள் ‘கட்டுப்படியாகும் ஆரோக்கியப்பராமரிப்பு” கிடைக்கப்பெறாததன் காரணமாக உயிரிழக்கின்றனர்.
ஏழைகளுக்கு ஆரோக்கியப்பராமரிப்பினை வழங்குவதில் இந்தியாவின் ஆரோக்கியப் பராமரிப்பு அமைப்பில் இல்லாதது நல்ல ஆளுகையே.
‘அனைவருக்கும் கட்டுப்படியாகும் ஆரோக்கியப் பராமரிப்பு” திறனளிப்பினை மேற்கொள்ள நமது மோடி அவர்கள் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் ஆரோக்கியப் பராமரிப்பு அமைப்பிற்கான அணுகுவசதியை ஏதுவாக்க பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். அவற்றுள் சில இப்பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2014 - ம் ஆண்டில் சாலைவிபத்தினால் ஏற்பட்ட மரணங்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,41,526 ஆகும். இதில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் மாநிலங்கள் உத்திரப்பிரதேசம், தமிழ்நாடு ,கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆகும்.
விபத்து அல்லது இயற்கை மரணங்கள் காரணமாக குடும்பத்தில் ஒருவர் இறப்பது குடும்பத்தின் வருவாய் ஆதாரத்தை பெரிதும் பாதிக்கும் மற்றும் குறிப்பாக ஏழைகளால் இதற்கான காப்பீட்டிற்கான அதிக பிரீமியம் தொகையை செலுத்தமுடியாத நிலையும் உள்ளது.
ஏழைக்குடும்பங்களுக்கு நிதியியல் ரீதியில் உதவியளிக்க மற்றும் அவர்களை பாதுகாக்க பிரதம மந்திரி மோடி அவர்கள் கட்டுப்படியாகும் எளிய கட்டணத்தில் விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டினை அறிமுகம் செய்துள்ளார்.