பெண்களை அதிகாரம் பெறச்செய்தல் (பெண்களுக்கு அதிகாரம் வழங்கல்): 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நம் மொத்த மக்கள்தொகையில் 48.5 சதவிகிதம் பெண்கள் ஆவார்கள். ஒரு பெண் அதிகாரம் ஃ ஆற்றல் பெறச் செய்யப்படுவாரானால் ஒரு நாடே அதிகாரம் பெற்றதாகும். பெண்கள் குடும்பத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நாட்டையும் மேம்படுத்துகிறார்கள். 'பெண்கள் அதிகாரம் பெறச் செய்தல் மற்றும் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி" சார்ந்த நாடு மட்டுமே மாற்றமடைய முடியும் என்று மாண்புமிகு பிரதமர் மோடி நம்புகிறார். பெண்களை அதிகாரம் ஃ ஆற்றல் பெறச்செய்வதற்காக பெண்கள் நலத்திட்டங்கள் பல தொடங்கப்பட்டுள்ளன. வரலாற்றில் முதல் முறையாக உலகிலேயே பெண்களை அதிகாரம் பெறச்செய்வதற்காக பல நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்திய முதல் நாடு இந்தியா ஆகும்.